ஜென் கொக்குகள்
-----------------------
பனிப்பிரதேசத்தின்
குளிர்காலை
ஏரியில் முழுக்க நிரம்பியிருக்கின்றன
கொக்குகள் .
உற்று நோக்குங்கள்
ஒரு கொக்குமில்லை .
****************
****************
ஆரஞ்சு நிறம்
குறைவாயிருக்கிறது .
கால்களை நீருக்குள்
அமிழ்த்தியிருக்கும்
கொக்குகளை வரைகிறான்.
2 comments:
அன்புள்ள நரனுக்கு,
தமிழின் நேரடி ஜென் கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் இரண்டு கவிதைகளும் அத்தகைய ஜென் ஒழுங்கைக் கொண்டிருக்கவே செய்கின்றன.மகாயான புத்தமதத்தைச் சார்ந்த ஜென், சான் என்று சீன மொழியில் அழைக்கப்பட்டாலும் இதன் தோற்றுவாயானது சமஸ்கிருதச் சொல்லான தயானா என்பதுதான். இது தியானம் என்ற பதத்தையே குறிக்கிறது.மிகச் சுருக்கமாக இதை முக்திக்கான பாதை எனலாம். தியானமே, அதாவது அதுவே மனித மனத்தை ஒன்றுகூட்டி, ஒளி மிக்கதாக மாற்றுகிறது. உங்கள் கவிதை அத்தகைய ஒரு தியான நிலையையே தனது மூலக் கருவாகக் கொண்டிருக்கிறது.
வெண்ணிற கொக்குகள் நிறம்பிய குளமானது தீவிர தேடலுக்குப் பின் நீர் உறைந்த அதன் தன்மையைக் காட்டுகிறது.கொக்குகள் தியானத்தின் குறிகளாக, குளம் நிலையாற்றல் சேமிப்புக் கிடங்காக தோற்றம் கொள்கிறது. இவையாவும் மனித மனம் தான் தேடிக்கொண்டிருக்கும் அந்த ஒன்றை மிக வலுவாக அதன் மூலத்திலிருந்தே பெற்றிருக்கிறது. கவிதை இங்கே காணாமல்போய், தியானமாய் மாறுகிறது. பிறகு, தியானம் கவிதையாகத் தன்னை உறுமாற்றிக்கொள்கிறது.
தமிழின் நேரடி ஜென் கவிதை சாத்தியத்திற்கு நன்றி.
வாழ்த்துக்களுடன்
சாகிப்கிரான்.

Post a Comment