Wednesday, August 18, 2010

கவிதை


மண்புழு
---------------

மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன்
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு உடலாய் ,
திசைகொரு உயிராய்....

பிரிந்து ,பிறந்து

பிறந்து,பிரிந்து


ஆனால் எல்லாம் சம வயதில் .


3 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

புது மாப்ள பேக் டூ பார்ம்.. நல்லாயிருக்கு நண்பா..:-)))

pichaikaaran said...

Superb . I love your thoughts . Keep writing more

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.:-)))
பேசியும் பார்த்தும் வெகு நாட்களாகிறது.