Saturday, May 23, 2009

காலச்சுவடு இதழ்108 ல் வெளியான எனது கவிதை

நான்கு பேர்
-----------------
வேறொருவரைப் பார்க்கப் போயிருந்தேன்
வருவாரெனச் சொல்லி
நான்குபுறமும் கண்ணாடியால்
சூழ்ந்தஅறையொன்றில்
அமரவைத்தார்கள்.
உள்ளே என்னைப் போலவே
எல்லா திசைகளிலும்
ஒருவர் அமர்ந்திருந்தார்.
நடுவே அமர்ந்திருந்தஎன்னைப் பார்க்க
அவர் வந்தார் அறைக்கு
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேர் அவரோடு நுழைந்தார்கள் அறைக்குள்
நான் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்
என்னை போலவேயிருக்கும் நான்கு பேர்
அவரைப் போலவேயிருக்கும்
நான்கு பேரோடுபேசிக்கொண்டிருந்தார்கள்.

2 comments:

நளன் said...

:))))

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல அவதானிப்பு!

நான் எழுதிய ஒன்று எனக்கு இங்கே நினைவுக்கு வந்தது...

//எங்கும் விரவிக் கிடக்கிறது
கவிதை

தட்டுப் பட்டு
எடுத்துக் கொண்டவர்கள்
எழுதிக் கொள்கிறோம்
தத்தம் பெயரை,
கவிதையின் கீழே.
//

-ப்ரியமுடன்
சேரல்